Warning: strtotime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 56

Warning: date(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 198

ரிஷப குரு பெயர்ச்சி பலன்கள்

Palangal


ரிஷப நேயர்களுக்கு,

எப்பொழுதும் புன்சிரிப்பும் மகிழ்ச்சியும் மற்றவர்களுடன் நெருக்கமாகப் பழகும் உங்களுக்கு குருவானவர் எதிர்பாராத பண வரவையும் பொருள்வரவையும் அளிப்பதோடல்லாமல் எதிர்பாராத விரையச் செலவுகளையும் உண்டு பண்ணுவார்.எதிர்பார்த்த செய்திகள் வருவதில் சற்று காலதாமதம் ஏற்படும்.எப்பொழுதும் ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமும் விருப்பமும் அதிகரிக்கும்.

இதுவரை வராமல் நிலுவையில் இருந்த பணவரவுகள் தவணை முறையில் வந்து சேரும்.பேச்சில் சாமர்த்தியம் கூடும்.சதா உழைத்துக் கொண்டும் பேசியும் சம்பாதித்த வண்ணம் இருப்பீர்கள்.பேச்சில் இனிமை கூடும்.ஆடை,ஆபரண நகைகள் இவற்றை வாங்குவதில் பெரிய அளவில் முதலிடு செய்ய சந்தர்ப்பம் அமையும்.

புதிய விஷயங்களைக் கற்பதில் நிறையச் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும்.இடமாற்றம்,வேலைமாற்றம் ஏற்பட வாய்ப்பு அமையும்.உடன் பிறப்புகளால் விரையமும்,நஷ்டமும் அல்லது மன உலைச்சளும் ஏற்படும்.அதே சமயம் நெருங்கிய உறவினர்களை இழக்க நேரிடும்.மனம் சதா எதையாவது ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டேயிருக்கும்.உடன்பிறந்தவர்களுக்காக நிறைய செலவு செய்ய வாய்ப்பு அமையும்.உடன்பிறந்தவகளுக்கு சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு அமையும்.அடிக்கடி பிரயாணம் செய்ய வாய்ப்பு அமையும்.

கல்வியைப் பொறுத்தவரை உயர் கல்வி அமையும்.நல்ல மதிப்பெண் எதிர்பார்த்த கல்லூரி அமைய வாய்ப்பு அமையும்.ஒரு சிலருக்கு இடம்,மனை,வீடு,வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு அமையும்.தாயாரால் ஒரு சிலருக்கு நன்மை ஏறபடும்.அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும்.உற்பத்தி (Production) சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்தி அதிகமாகவும் விற்பனை குறைவாகவும் இருக்கும்.சுய தொழில் புரிபவர்களுக்குத் தொழில் விட்டு விட்டு நடக்கும்.

இதுவரை நடக்காமல் இருந்த சுப காரியங்கள் வீட்டில் இனிதே நடந்தேறும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நல்ல மருத்துவரை அணுகி சோதனை மேற்கொள்ளவும்.குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும்.குழந்தைகள் வெளிநாடு,வெளியூர் செல்ல சந்தர்ப்பம் அமையும்.ஒரு சிலரது குழந்தைகள் வேலையின் நிமித்தமாக வெளிநாடு,வெளியூர் செல்ல சந்தர்ப்பம் அமையும்.காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும்.ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும்.ஒரு சிலருக்கு காதலே போராட்டமாக இருக்கும்.பங்கு சந்தையில் ஆரம்பத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.அதை வைத்து நிறைய முதலிடு கூடாது மிகவும் கவனமாகச் செயல்படுதல் வேண்டும்.

உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை.அடிவயிறு,கண்,கால் பாதங்களில் பிரச்சனை.ஒரு சிலருக்கு சக்கரை வியாதி கூடி அதனால் வைத்தியச் செலவுகள் கூடும்.எனவே உடலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை அணுகவும்.இதுவரை வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும்.கம்பெனி மாற ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும்.வேலையின் நிமித்தமாக வெளியூர்,வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் அமையும்.வழக்குகள் வெற்றி தரும்.கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க நேரிடும்.போக்குவரத்தில் வண்டி வாகனங்களில் மிகவும் கவனமுடன் சென்று வரவும்.

இதுவரை தள்ளிப்போன திருமணம் இனிதே நடந்தேறும்.எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் கணவன் அல்லது மனைவி மூலம் எதிர்பாராத லாபம் ஏற்படும்.தந்தையாரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.தாய்மாமன்களால் ஆதரவும் எதிர்பார்த்த அன்பும் கிட்டும்.உயர் கல்வி பயில சந்தர்ப்பம் அமையும்.ஒரு சிலருக்கு "உதவித்தொகை" கிடைக்க வாய்ப்பு அமையும்.நண்பர்களால் ஆதாயமும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற மன உளைச்சலும் ஏற்படும்.

ஆடை ஆபரணத் தொழில் புரிபவர்கள் தகவல் மற்றும் போக்குவரத்து மற்றும் ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள்.சிறு தொழில் புரிபவர்களுக்கு சுமாரான காலமாகும்.அதே சமயம் அடிமைக்கு வேலைக்குச் செல்பவர்கள்,அரசு மற்றும் தனியார் துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர்.எதிர்பார்த்த உத்யோக உயர்வு,ஊதிய உயர்வு சகலமும் ஏற்படும்.

அரசியலில் இருப்பவர்கள் எதிர்பார்த்த வெற்றி பெறுவர்.கலைத்துறையில் இருப்பவர்கள் பெயர்,புகழ் ஏற்றம் பெறுவர்,மருத்துவர், பொறியாளர்,ஐ.டி துறையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.நீதித்துறை,நிதித்துறையில் இருப்பவர்கள் உற்பத்தி செய்வோர் கவனமுடன் இருத்தல் வேண்டும்.ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள்.கமிஷன்,ஏஜென்சி,புரோக்கர் தொழில் புரிபவர்கள் சற்று சுமாராக இருக்கும்.விவசாயம் ஏற்றம் தரும்.வர்த்தகம் மற்றும் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள் எதிர்பார்த்த லாபம்யிட்டுவர்.

ஸ்ரீ மகா லெஷ்மியை வணங்குவதன் மூலமும் திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு உதவுவதன் மூலமும் எதிர்பார்த்த நற்பலன்கள் கூடும்.

 
நவாம்சம் கட்டம்

Warning: strftime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 250