Warning: strtotime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 56

Warning: date(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 198

Ragu Kethu Peyarchi

மேஷ ராகு கேது பெயர்ச்சி பலன்கள்



மேஷ நேயர்களுக்கு,

2 ம் இடத்தில் கேதுவும் 8 ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தனவரவு பொருள்வரவு ஏற்படும் அல்லது கணவன் அல்லது மனைவிஅல்லது முன்னோர்களின் சொத்துக்கள் அல்லது பணவரவு ஏற்படும் .ஒரு சிலருக்கு பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்க வாய்ப்பு அமையும்.

பேச்சில் மிக அதிக  கவனம் தேவை .தேவையில்லாமல் மற்றவர்களுடன் பேசுதல் கூடாது .படிப்பு நன்கு வரும் .தொழிற் கல்வி பயில நன்கு வாய்ப்பு அமையும் .கஷ்டப்பட்டு உழைத்தப் பணத்தை மிகவும் கவனமுடன் கையாளுதல் வேண்டும் .யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது .கொடுத்தப் பணம் திரும்ப வருவதில் காலதாமதம் ஆகும் .

உடன்  பிறப்புக்களால் எதிர்பாராத ஆதாயமும் அதே சமயம் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும் .போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிக அதிக கவனம் தேவை .புதிய விஷயங்களில் ஈடுபட மனம் ஆர்வமும் துடிப்புடனும் காணப்படும். ஒரு சிலருக்கு உடன் பிறந்தவர்களால் வெளிநாட்டுக்குச் செல்வதில் தடை ஏற்படும் .விசா கிடைக்காமல் இருப்பவர்களுக்கு விசா கிடைக்க வாய்ப்பு அமையும் .எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும்.

ஒரு சிலர் இடம்,பொருள்,மனை,வீடு கடன் வாங்கி வாங்க வாய்ப்பு  ஏற்படும் .சொத்து அல்லது வீடு வாங்கும் பொழுது பத்திரங்களை மிகவும் சரி  பார்த்து பதிவு செய்யவும் .ஏற்றுமதி இறக்குமதி தொழில் புரிபவர்கள் எதிர்பாராத நன்மை அடைவர்.

பங்குசந்தையில் ஈடுபடுவர்கள் மிகவும் கவனமாகச் செயல்படுதல் வேண்டும்.பெரிய அளவில் முதலிடு கூடாது .சினிமா போன்ற துறைகளில் இருப்பவர்கள் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படுவதில் தடை ஏற்படும் .குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மருத்துவம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும்.காதல் விஷயங்கள் ஒரு சிலருக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் தரும் .ஒரு சிலருக்கு காதலால் அசிங்கமும் அவமானமும் பிரச்சினைகளும் ஏற்படும் .ரேஸ் ,லாட்டரி ,விளையாட்டு இவற்றில் மனம் அதிக ஈடுபாடு காட்டும்.எனவே மிக அதிக கவனம் தேவை .மேலும் குழந்தைகளால் வீட்டில் சுப காரியங்களும் அதே சமயம் ஒரு சிலருக்கு குடும்பத்தில் புதுவரவுகளும் ஏற்பட வாய்ப்பு அமையும் .

வேலையை அடிக்கடி மாற்ற வேண்டிய இருக்கும் .வேலை கிடைக்காமல் இதுவரை இருந்தவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அதில் முழு திருப்தியில்லாமல் அடிக்கடி கம்பெனி மாற வேண்டிய சூழ்நிலை அமையும்.அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் .ஒரு சிலர் உல்லாச டூர் போக வாய்ப்பு ஏற்படும் .வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும்   ஒரு சிலருக்கு கிட்டும் .உடல் ஆரோக்யத்தில் மிக அதிக கவனம் தேவை .வலது கண் ,அடிவயிறு ,பின் கழுத்துப் பகுதிகள் ,ஜனன உறுப்புக்களில் பிரச்சனை ஏற்பட்டு விலகும் .எனவே உடலில் சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை அணுகவும் .புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் ஒரு சிலருக்கு அமையும் .உடல் ஆரோக்கியம் அல்லது வேலை அல்லது கடன்  இவற்றில் ஒன்றில் பாதிக்கப்பட வாய்ப்பு அமையும் .உடன் பணிபுரிபவர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகவும் .தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது .இல்லையேல் வழக்கு வில்லங்கங்களை விலைக்கு வாங்க வேண்டி வரும் .

உயர்கல்வி பயிலவும் நல்ல கல்லூரி அமையவும் நல்ல மதிப்பெண் பெறவும் வாய்ப்பு அமையும் .ஒரு சிலருக்கு படிப்பின் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும் .அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.எதிர்பார்த்த வெற்றி ,புகழ் கிடைக்காமல் போகும் .

அரசு அதிகாரிகள் நற்பலன் அடைவர்.அதே சமயம் போலீஸ் ,இராணுவம் ,விஞ்ஞானம் ஆராய்ச்சி ,பட்டமேற்படிப்பு படிப்பவர்கள் பெரிய அளவில் நற்பலன் அடைவர் .சினிமா ,விளையாட்டு ,காதல் ,பங்குச்சந்தை ,சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனமுடன் இருத்தல் வேண்டும் .

ஆயுதம் ,வெடிமருந்து ,வெடிபொருட்கள் இராசயணம் ,இரும்பு ,எக்கு,நிலக்கரி சுரங்கத் தொழில் புரிபவர்கள் பூமிக்குக் கீழ் பணிபுரியும் தொழில் புரிபவர்கள் மிக அதிக கவனம் தேவை .ஐ.டி துறை ,கல்வித்துறையில் இருப்பவர்கள் நீதித்துறையில் இருப்பவர்கள் ஏற்ற இறக்கங்களை சந்தித்துக் கொண்டே இருப்பார் .வேலையில் திருப்தி இல்லாத தன்மையும் ஏற்படும் .அடிக்கடி ஆலய தரிசனம் செய்ய வாய்ப்பு கிட்டும் .அதிலும் நிறையத் தடைகள் ஏற்பட்டு வெற்றி கிட்டும் .இராசயணம் ,தீப்பெட்டி ,மருத்தவம் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிக அதிக கவனமுடன் இருப்பது நல்லதாகும் .மேலும் சிறு வியாபாரிகள் ,வணிகர்கள் ,போக்குவரத்து ,செய்தி ,அச்சுகத் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவார்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியை வணங்கி வருவதன் மூலம் சகல நற்பலன்களும் கிட்டும்
 
நவாம்சம் கட்டம்

Warning: strftime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 250