Warning: strtotime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 56

Warning: date(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 198

மேஷ குரு பெயர்ச்சி பலன்கள்



மேஷ நேயர்களுக்கு,

அன்பாகவும் வீரமாகவும் அதே சமயம் கண்டிப்புடனும் நடக்கும் மேஷ லக்னக்காரர்களாகிய உங்களுக்கு குரு பகவான் உங்கள் லக்னத்திலே சஞ்சரிப்பது மிகவும் சிறப்பானதாகும்.தெய்வ அனுகூலம் கிடைக்க சந்தர்ப்பம் அமையும்.தாங்கள் இதுவரை எதிர்பார்த்த செய்திகள்,தகவல்கள் நல்லபடியாக வந்து சேரும்.

புதிய விஷயங்களைக் கற்பதிலும் புதிய தொழில்களில் ஈடுபடுவதிலும் மிகவும் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும்.எதிலும் துணிந்து செயல்படுவீர்கள்.அலாதியான தன்னம்பிக்கை எப்பொழுதும் கூடாது மிகவும் நிதானமாக நடந்து கொள்ளல் வேண்டும்.புதிதாக அதாவது ஒரு கலைத்துறையில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும்.

பேச்சில் மிகவும் கவனம் தேவை.தேவையில்லாமல் மற்றவர்களிடம் பேசுதல் கூடாது.எதிலும் நிதானமாக பேசி பழகவும்.நல்ல வருமானம் வரும்.வரும் வருமானம் எல்லாம் முதலிடாக அமையும்.

உடன் பிறந்தவர்களுக்காகவும்,உறவினர்களுக்காகவும் நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும்.மனதில் இனம் தெரியாத குழப்பமும் அமைதியின்மையும் ஏற்படும்.நன்மை பற்றி தேவையில்லாத வதந்திகள் உலவும்.இல்லையேல் நன்மைப்பற்றி தவறான செய்திகள் பரப்படும்.அடிக்கடி சிறு பிரயாணம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.அதனுள் எதிர்பார்த்த நன்மைகள் பெரிய அளவில் இராது.

ஒரு சிலருக்கு இடம்,மனை,வீடு,வண்டி வாகனங்கள் நிறைய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும்.நல்ல கல்வி அமையும்.எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவும் எதிர்பார்த்த கல்லூரி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும்.கல்விக்காக கடன் கிடைப்பதில் ஒரு சிலருக்கு சற்று சிரமம் ஏற்படும்.தாயாரால் நன்மையையும் அன்பும் ஒரு சிலருக்கு எதிர்பாராமல் கிடைக்கும்.அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் மிக அதிக கவனம் தேவை.ஒரு சிலர் இருக்கும் மனையை விற்றுவிட்டு புது வீடு வாங்க வாய்ப்பு அமையும்.

குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும்.குழந்தை இல்லாதர்வர்களுக்கு குழந்தைபேறு அமையும்.அதே சமயம் ஒரு சிலர் குழந்தைகளுக்காக மருத்துவச் செலவு செய்ய வாய்ப்பு அமையும்.கலைத்துறையில் இருப்பவர்கள் பெயர்,புகழ் பெறுவர்.அரசியலில் இருப்பவர்கள் நிறையப் பிரச்சைகளைச் சந்திக்க வேண்டிவரும்.குழந்தைகள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.குழந்தைகள் உயர் கல்வி பயில வாய்ப்பு அமையும்.உயர் கல்விக்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம் அமையும்.

காதல் விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.காதல் கை கூடுவதில் நிறையப் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடிந்து வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

இதுவரை வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சிக்கிரம் வேலை கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.வேலையில் உயர்வும் ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும் கிட்டும்.ஒரு சிலருக்கு கம்பெனி மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.ஒரு சிலர் வேலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி பயணமும்,வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

போக்குவரத்து வண்டி வாகனங்களில் எச்சரிக்கை தேவை.ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய சந்தர்ப்பம் அமையும்.உடல் ஆரோக்யத்தில் மிக கவனம் தேவை.கடன் வாங்க வேண்டி வரும்.ஒரு சிலர் புதிய கடன் வாங்க பழைய கடனை அடைப்பர்.தந்தையால் யோகம் ஏற்படும்.உடலில் சிறுது பிரச்சனை ஏற்பட்டாலும் நல்ல மருத்துவரை சந்தித்து உடல்நலம் பேணுதல் வேண்டும்.

ஒரு சிலருக்கு உல்லாசமாக டூர் போக வாய்ப்பும் அடிக்கடி ஆலய தரிசனம் செய்ய வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும்.வழக்கு விஷயங்களில் பெரிய அளவில் வெற்றியிராது.எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் பெரிய இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.

போக்குவரத்து,தகவல் தொடர்பு ஏற்றுமதி,இறக்குமதி,கமிஷன்,ஏஜென்சி புரோக்கர் தொழில் புரிபவர்கள் நற்பலன் அடைவர்.சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் விவசாயிகள்,வணிகர்கள் எதிர் பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

சினிமா,டி.வி,விளம்பரத் தொழில் ஆடை,ஆபரணத் தொழில் புரிபவர்கள்.ஏலக்ட்ரிக்கல்ஸ் மற்றும் எலெக்ட்டரானிக்ஸ் துறையில் இருப்பவர்கள் நிதித்துறையில் இருப்பவர்கள் மருத்தவர்கள்,பொறியாளர்கள் மற்றும் ஜோதிடர்கள் ஏற்றம் பெறுவார்.

ஷேர் மார்க்கட்டில் முதலிடு செய்பவர்கள் மிக மிக கவனமாகச் செயல்படுதல் வேண்டும்.அழகுக்கலை மற்றும் ரெடிமேட் துணிகள்.நூல் மற்றும் ரப்பர் தொழில் புரிபவர்கள் பெரிய அளவில் முதலிடு செய்வதற்கு முன் நன்கு யோசித்து செயல்படவும்.

ஆபரணத் தொழில் புரிபவர்கள் சாலையோரம் தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர்.ஒரு சிலர் நண்பர்களால் ஆதாயம் அடைவர்.சுயமாகவோ அல்லது பாட்னர்ஷிப்பகவோ தொழில் செய்வதில் மிக கவனம் தேவை.ஐ.டி துறை மற்றும் கப்பல் மற்றும் மீன்பிடித் தொழில் புரிபவர்கள் எதிர்பார்த்த வெற்றியையிட்டுவர்.

வேல் கொண்டு வினை தீர்க்கும் முருகனையும்,அன்னை வேளாங்கண்ணி மாதாவையும் வணங்கவர எண்ணிய எல்லாம் இனிமையாக நடந்தேறும்.

 
நவாம்சம் கட்டம்

Warning: strftime(): It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected the timezone 'UTC' for now, but please set date.timezone to select your timezone. in /home/jathagam/public_html/libraries/joomla/utilities/date.php on line 250